அந்த டேஞ்சரான இந்திய பேட்ஸ்மேனை சமாளிக்கலன்னா.. தெ.ஆ ஜெய்க்க முடியாது.. பவுச்சர் எச்சரிக்கை

Mark Boucher
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது.

ஏனெனில் 2010க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது. இருப்பினும் இம்முறை டெஸ்ட் சாம்பியன் என்ற தன்னம்பிக்கையுடன் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் தொடரை வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆபத்தான பண்ட்:

குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ரிஷப் பண்ட் ஓரிரு மணி நேரங்களில் வெற்றியைப் பறிக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடக்கூடிய ஆபத்தான பேட்ஸ்மேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அவரை விரைவில் அவுட்டாக்க தவறினால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவது கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்டை அதிரடியாக விளையாட விடாமல் தடுக்க தென்னாபிரிக்க அணிக்கு அவர் சில ஆலோசனைகள் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மார்க் பவுச்சர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தான வீரர். அவர் சில மணி நேரங்களில் ஆட்டத்தை மாற்றுவதை நாம் பார்த்துள்ளோம். அதை அறிந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி அவருக்கு எதிராக தயாராகி வர வேண்டும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா புத்திசாலியாக இருந்தால் அவருடைய உணர்ச்சிகளுடன் கொஞ்சம் விளையாட வேண்டும்”

- Advertisement -

பவுச்சர் எச்சரிக்கை:

“அத்துடன் அவர் என்ன செய்ய விரும்புகிறார், எப்படி ஆதிக்கம் செய்ய விரும்புகிறார் என்பதையும் புரிந்து விளையாட வேண்டும். சில நல்ல ஃபீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி அவர் எளிதாக பவுண்டரிகள் அடிப்பதை தடுத்து ரன்களை குவிக்க கடினமாக உழைக்க வைப்பது நல்ல வழியாக இருக்கும். ஏனெனில் பொதுவாக அவர் அதை செய்வதில்லை”

இதையும் படிங்க: ஷமியை எடுக்கலன்னா கூட பரவால்ல.. இப்படி அவமானப்படுத்தாம அதை தெளிவா சொல்லுங்க.. புஜாரா விமர்சனம்

“பெரும்பாலான சமயங்களில் அவர் ஸ்கோர் போர்ட் முன்னோக்கிச் செல்வதையே விரும்புவார். எனவே அங்கே நீங்கள் அவரை தடுத்து நிறுத்தி கொஞ்சம் கடுப்பேற்ற வேண்டும். அவருடைய அமைதியை சோதிக்க வேண்டும். அவருக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வீட்டுப்பாடம் செய்து வர வேண்டும். அதை தென்னாபிரிக்க அணி ஏற்கனவே திட்டமிட்டு செய்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement