- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒழுங்கா இருங்க.. நானா இருந்தா ஆகாஷ் தீப்புக்கு முழங்கை வைத்தியம் செஞ்சு விட்ருப்பேன்.. ட்ரெஸ்கோத்திக் எச்சரிக்கை

இங்கிலாந்து மண்ணில் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 31ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அதிரடியாக ஆரம்பித்தும் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 75/2 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

ஆகாஷ் தீப்பின் பதிலடி:

ராகுல் 7, சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் களத்தில் ஜெய்ஸ்வால் 51*, ஆகாஷ் தீப் 4* உள்ளார்கள். முன்னதாக அப்போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ரிவர்ஸ் ஸ்கூப் வாயிலாக சிக்சர் அடித்தார். அப்போது “என்னை உங்களால் இங்கே அவுட்டாக்க முடியாது” என்று அவர் சவால் விடுத்தார்.

அதை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுக்கோப்புடன் வீசிய ஆகாஷ் தீப்புக்கு எதிராக மீண்டும் அதே போல ஸ்கூப் அடிக்க முயற்சித்த டக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அப்போது பெவிலியன் நோக்கி நடையைக் கட்டிய அவருடைய தோளில் கையைப் போட்டு சில வார்த்தைகளை சொல்லி ஆகாஷ் தீப் தக்க பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் அங்கே தாமாக இருந்திருந்தால் ஆகாஷ் தீப் முகத்தில் முழங்கையால் குத்து விட்டிருப்பேன் என்று இங்கிலாந்தின் துணை பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோத்திக் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

எச்சரித்த கோச்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவே என்னுடைய காலமாக இருந்திருந்தால் நிறைய வீரர்கள் ஆகாஷ் மேலே முழங்கையை விட்டிருப்பார்கள் என்று சொல்வேன். ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி செல்லும் போது ஒரு பவுலர் இப்படி செய்ததை நான் எப்போதும் பார்த்ததில்லை. இத்தொடரில் இரு அணி பவுலர்களும் அவ்வப்போது பேட்ஸ்மேன்களிடம் சில வார்த்தைகளைப் பேசுவதை பார்த்திருக்க முடியும்”

இதையும் படிங்க: 92/0 டூ 247 அவுட்.. பஸ்பால் இங்கிலாந்தை அடக்கிய இந்தியா.. ஸ்டோக்ஸை முந்தி சிராஜ் அபார சாதனை

“ஆனால் இந்த செயல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதல்லவா? அது நகைச்சுவையான ஒன்றாகவும் இருக்கிறது. டக்கெட் அங்கே பெரிதாக எதுவும் செய்யவில்லை. நீங்கள் அவுட்டாகும் போது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே செல்ல வேண்டும். ஏனெனில் உங்களுடைய வேலை அங்கே முடிந்து விட்டது. அவரிடம் பவுலர் அப்படி செல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.

- Advertisement -