இங்கிலாந்து ஒன்னும் ஸ்டுப்பிட் இல்ல.. இந்தியாவின் வெற்றியை தடுக்க இதை செஞ்சா போதும்.. பேட்டிங் கோச் பேட்டி

Marcus Trescothick
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்கம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

ஸ்டுப்பிட் கிடையாது:

அடுத்ததாக விளையாடிய இந்தியா மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 161 ரன்கள் அடித்து 608 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார். அதைத் துரத்தும் இங்கிலாந்து நான்காவது நாள் முடிவில் 72/3 என தடுமாறுவதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.

மறுபுறம் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதே எதார்த்தமாகும். எனவே அந்த அணி தோல்வியைத் தவிர்க்க ட்ராவுக்காக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பவுலர்களுக்கு பயந்துகொண்டு இங்கிலாந்து அணி வெற்றிக்கு போராடாமல் இருக்காது என்று பேட்டிங் பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் கூறியுள்ளார்.

- Advertisement -

வெற்றியை விட மாட்டோம்:

அதே சமயம் நிலைமை கை மீறுவது போல் தெரியும் பட்சத்தில் ட்ராவுக்காக விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்க தாங்கள் ஸ்டுப்பிட் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் இந்தியாவின் வெற்றியைத் தடுக்க அனைத்து வகைகளிலும் இங்கிலாந்து போராடும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்ரெஸ்கோதிக் பேசியது பின்வருமாறு. “மிகவும் சவாலான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: உலக சாதனை படைச்சது தெரியாது.. கில் தான் இன்ஸ்பைரேஷன்.. அடுத்த டைம் 200 அடிப்பேன்.. சூர்யவன்சி பேட்டி

“இப்போட்டியை டிரா செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்க நாங்கள் ஒன்றும் முட்டாள் (ஸ்டுப்பிட்) கிடையாது. நீங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 3 முடிவுகள் சாத்தியமாகும். ஒன்று வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும். இதுவரை நாங்கள் ட்ரா பற்றி எதுவும் பேசவில்லை. நாங்கள் தொட வேண்டிய இலக்கு சவாலானது என்பது தெரியாத அளவுக்கு நாங்கள் அப்பாவி கிடையாது. பதுங்கு குழிக்குள் இருந்து செல்லும் எங்களுடைய வீரர்களில் சிலர் வெற்றியை நோக்கி விளையாடுவார்கள்” எனக் கூறினார்.

Advertisement