ஏற்கனவே எனக்கு இருந்த அனுபவம் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்த உதவியது – ஸ்டாய்னிஸ் பேட்டி

Stoinis-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது.

srhvsdc

அதிகபட்சமாக தொடக்க வீரர் தவான் 50 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு துவக்க வீரர் என ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் இறுதி நேரத்தில் 22 பந்துகளை சந்தித்த ஹெட்மையர் அதிரடியாக 42 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 33 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் டெல்லி அணி சார்பாக ரபாடா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டாய்னிஸ் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் அறிவிக்கப்பட்டார்.

rabada

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆட்டநாயகன் ஸ்டாய்னிஸ் கூறுகையில் : ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிபிஎல் தொடரில் நான் இரண்டு சீசன்களில் ஓபனிங் செய்துள்ளேன். அதனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது சிறப்பாக கைகொடுத்தது. இதுபோன்று சீக்கிரமாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்போது துவக்கத்திலேயே என்னால் எளிதாக பேட்டிங் செய்ய முடியும். நான் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இதுவே எனது முதல் ஃபைனல்.

Stoinis

மும்பை மிகப்பெரிய அணி அந்த அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறது. இருப்பினும் எங்களது நல்ல கிரிக்கெட்டை அவர்களுக்கு எதிராக கொடுப்போம். என்னுடைய திறனில் சற்று மாற்றங்களை ஏற்படுத்தி பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சிறப்பாக விளையாடி வருகிறேன். இந்த வருட கோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம் என நம்புவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement