பேட்டிங்கில் ஒரு ஓவர். பவுலிங்கில் ஒரு ஓவர். பஞ்சாப் அணியை தனி ஆளாக வீழ்த்திய டெல்லி வீரர் – விவரம் இதோ

Stoinis-2
- Advertisement -

டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களை குவிக்க சூப்பர் ஓவர் வைத்து வெற்றி முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆரம்பத்தில் தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்த டெல்லி அணியின் நிலைமை மாற்றியவர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் என்ற ஒரே வீரர் தான் என்றால் அது மிகை அல்ல. அந்த காரணங்களை தற்போது பார்ப்போம்.

Stoinis 1

ஆரம்பத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 19வது ஓவர் வரை டெல்லி அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் 20 ஆவது ஓவரில் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து அசத்தினார் ஸ்டாய்னிஸ் அதில் இரண்டு சிக்சர்கள் 3 பவுண்டரிகள் அடங்கும். அதன் மூலம் 20 ஆவது ஓவரில் 30 ரன்கள் அடித்த அவர் அணிக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் டெல்லி அணி 130 ரன்களை எடுக்குமா ? என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடைசி ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து போட்டியை தலைகீழாக்கி 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 157 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் கலக்கிய ஸ்டாய்னிஸ் அதேபோன்று பவுலிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்று கூறலாம். ஏனெனில் பஞ்சாப் அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனால் பஞ்சாப் அணி எளிதில் தோற்றுவிடும் என்று அனைவரும் கருதினர். ஆனால் துவக்க வீரர் அகர்வால் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். வெற்றிக்கு ஒரு ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது அந்த கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தில் 2 ரன்கள், மூன்றாவது பந்தில் 4 ரன்கள் என மொத்தம் 12 ரன்கள் குவித்தார். இதனால் 3 பந்துகளுக்கு 1 ரன் தேவை என்ற நிலை இருந்ததால் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் கருதினர்.

Stoinis

ஆனால் மீதமுள்ள 3 பந்துகளில் ஒரு பந்தினை டாட் பாலாகவும், 5-வது பந்தில் அகர்வாலையும், கடைசி பந்தில் ஜோர்டானின் விக்கெட் எடுத்தார் ஸ்டாய்னிஸ். இதன் மூலம் போட்டி டைக்கு சென்றது. அதன் பின்னரே டெல்லி அணி வென்றது. எனவே பேட்டிங்கில் கடைசி ஓவரில் 30 ரன்களை குவித்து, பவுலிங்கில் 20 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து தனி ஒரு ஆளாக டெல்லி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் என்றால் அது மிகையல்ல. ஆட்டநாயகனாகவும் அவரே தேர்வானார்.

Advertisement