இப்படி ஒரு அசுரவேக பவுன்சரில் இருந்து தப்பியது பேட்ஸ்மேனின் அதிர்ஷ்டம் தான் – வைரல் வீடியோ

Stoinis

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பரபரப்பும் விறுவிறுப்பும் சற்றும் குறைவில்லாமல் செல்லும் இந்த தொடரின் இந்தாண்டு போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஹோபர்ட் அரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த விடயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் ஸ்டோனிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிரணி வீரர் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் ஹெல்மட் பகுதியில் பலமாக அடி வாங்கினார்.

அந்த பந்து கிட்டத்தட்ட 145-150 கிலோ மீட்டர் வேகத்தில் அவரது ஹெல்மட்டை தாக்கியது. இதே போன்ற வேகத்தில் பந்து தாக்கி பலமுறை வீரர்கள் மைதானத்தில் ரத்த காயத்துடன் வெளியேறியதை நாம் பலமுறை கண்டுள்ளோம். ஆனால் ஸ்டானிஸ் ஹெல்மெட்டில் அடி வாங்கி கீழே விழுந்தாலும் அதன் பின்னர் சுதாரித்து எழுந்து கொண்டு தான் மீண்டும் விளையாடுவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை . பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய அவர் சிறிய அதிர்ச்சியுடன் சற்று கலக்கமாக எழுந்து நின்று மீண்டும் பேட்டிங் செய்ய தொடர்ந்தார். இந்த வீடியோவினை பகிர்ந்த ரசிகர்கள் நிச்சயம் இவர் அதிர்ஷ்டக்காரர் தான் என்று இந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.