
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை இந்தியாவில் நடைபெற்று வந்த 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தாலும் பின்னர் மிகச் சிறப்பாக செயல்பட்டடு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திஅசத்தியது.
பின்னர் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடியது. அதன்படி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 203 ரன்களை குவித்தது.
இதன் காரணமாக 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கு மிகப்பெரியதாக இருந்தாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19 ஓவரிலேயே 207 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அடுத்ததாக பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி கட்டத்தில் தோல்வியை தழுவிய வேளையில் அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தரையில் உட்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாத மும்பை அணி இம்முறை சிறப்பாக செயல்பட்டு இப்படி கடைசியில் தோற்றது அவருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஹார்டிக் பாண்டியா மனமுடைந்து கீழே அமர்ந்ததை பார்த்த பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பாண்டியாவின் அருகில் சென்று அவரது தோளை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் பத்தி எனக்கு தெரியாதா? அதை டார்கெட் பண்ணிதான் அடிச்சேன் – நேஹல் வதேரா பேட்டி
இப்படி எதிரணி கேப்டன் சோகத்தில் இருக்கும் போது அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் தேற்றிய சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.