- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் எதும் மாறல.. விராட் கோலிக்கு எதிரா பந்து வீசுவது எரிச்சலா இருக்கு – மார்கோ யான்சென் புலம்பல்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்த இந்திய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து (1-0) ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.

விராட் கோலிக்கு எதிராக பந்துவீசுவது எரிச்சலா இருக்கு : மார்கோ யான்சென்

பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 17 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 120 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 135 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த ரன்கள் மூலமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது விராட் கோலிக்கு எதிராக பந்து வீசியது குறித்த தனது அனுபவத்தை பற்றி பேசிய தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சென் சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதுமே அவர் விளையாடுவதை டிவியில் பார்த்து வளர்ந்த நான் தற்போது அவருக்கு எதிராகவே பந்துவீசும் போது அவர் என்னுடைய பந்தை அடித்து விளையாடுகையில் எரிச்சலாக இருக்கிறது அதே நேரத்தில் வேடிக்கையாகவும் இருக்கிறது.

- Advertisement -

அவர் முன்பு எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று தற்போதும் டிரைவ், ஃபுல் ஷாட், கட் ஷாட் என எல்லாவற்றையும் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் பேட்டிங்கில் பெரியதாக எதுவும் மாறவில்லை. முன்பு எப்படி விளையாடினாரோ அதேபோன்று தற்போதும் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி லண்டனில் பயிற்சி செய்வது ஏன்? நெட் பிராக்டீஸ் கூட அங்கதான் – ரவிச்சந்திரன் அஷ்வின் விளக்கம்

உலகத்தரம் வாய்ந்த அவரைப் போன்ற வீரர்களுக்கு எதிராக பந்துவீசும் போது முதல் 10-15 பந்துகளில் அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் அவர்கள் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் மிகப்பெரிய ரன் குவிப்புக்கு செல்வதாகவும் மார்க்கோ யான்சென் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -