ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் அத்தொடரில் உலகின் டாப் 20 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலைக் கொடுத்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் அதற்கு ஓப்பனிங்கில் அடித்து நொறுக்க வேண்டிய துணை கேப்டன் சுப்மன் கில் நன்றாக விளையாட வேண்டியது அவசியமாகிறது. 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதிரடியாக தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறினார். அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனை ஓப்பனிங்கில் களமிறக்கியது.
துணை கேப்டன்ஷிப் முக்கியமல்ல:
அந்த வாய்ப்பில் அபிஷேக் சர்மா நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதே போல சஞ்சு சாம்சனும் 3 சதங்கள் அடித்து ஒரு வழியாக நிலையான இடத்தைப் பிடித்தார். ஆனால் திடீரென தேர்வுக்குழு சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கிறது. அதற்காக அவரை டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
அந்த வாய்ப்பில் கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காத கில் மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல வேண்டுமெனில் சாம்சன் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கில்லை கழற்றி விடுங்க:
“ஒருவரின் தேர்வை கேப்டன்ஷிப் உறுதிப்படுத்தக் கூடாது. அவருடைய செயல்திறனே தேர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால் அதற்கான முடிவுகள், தைரியமாக நியாயமாக பங்களிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவருடைய பெயர் அல்லது வருங்கால திட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்கக்கூடாது”
இதையும் படிங்க: ஒரிஜினல் ஃபார்முக்கு வந்த பாபர் அசாம்? மீண்டும் சொதப்பியதால் கிங் கோலியுடன் ஒப்பிட்ட ஆஸி ஏமாற்றம்
“என்னுடைய கருத்துப்படி இந்தியாவுக்கு ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தயாராக இருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்கா மண்ணிலும் வங்கதேசத்துக்கு எதிராகவும் அடுத்தடுத்த சதங்கள் அடித்துள்ளார். மறுபுறம் சுப்மன் கில் ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்கப்படுவதற்காக நீண்ட காலத் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை கில் ரன்கள் அடித்து சூரியகுமார் ரன்களை அடிக்கத் தவறினால், கேப்டன்ஷிப் பொறுப்பு கில்லை நோக்கிச் செல்லும். இருப்பினும் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறுவதற்கு முன் கில் முதலில் பேட்டிங்கில் அசத்த வேண்டும்” என்று கூறினார்



