இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது ஏற்கனவே இந்த தொடரை இழந்துவிட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியை பெரும் முனைப்புடன் தற்போது முழுவீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.
வாஷிங்டன் சுந்தரால் குழப்பம் ஏற்படும் :
இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியின் போது டாஸ் வென்றும் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்யாதது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளங்களில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்தது தவறு என்றும் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து புனே நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கவே அவர் அணிக்குள் கொண்டுவரப்பட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க தற்போது வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வந்தது பெரிய பிளவை இந்திய அணிக்குள் ஏற்படுத்தும் என முன்னாள் வீரரான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பெங்களூரு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வானிலை தான் காரணம்.
பந்துவீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கை தேர்வு செய்து தவறு செய்து விட்டார்கள். அதே போன்று அந்த முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் மாற்றத்தை செய்திருக்கக் கூடாது. ஆனால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது சிறப்பான முடிவு என்று நீங்கள் சொல்லலாம்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான பயிற்சியாளாக வி.வி.எஸ் லக்ஷ்மணன் செயல்பட வாய்ப்பு – என்ன காரணம்?
ஆனால் என்னதான் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டாலும் அது இந்திய அணிக்குள் நாளடைவில் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் அணிக்குள் விரிசல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் இருந்தும் அவருக்கு பதிலாக சுந்தரை விளையாட வைத்தது தவறு. அதே போன்று குல்தீப் யாதவ் போன்ற திறமையான வீரருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இப்படி பல விடயங்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.



