கேப்டன் பதவியால் மட்டும் உங்களுடைய இடம் உறுதியாகாது.. சூரியகுமார் மற்றும் கில்லை – எச்சரித்த மனோஜ் திவாரி

Manoj Tiwary
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டனான சுப்மன் கில் ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் கடந்த சில நாட்களாகவே அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் எதிர்வரும் 2026 பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அணியின் முக்கிய வீரர்களான இவர்கள் இருவருமே தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கேப்டன்சியால் உங்கள் இடம் உறுதியாகாது : மனோஜ் திவாரி

அதிலும் குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு 21 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதேபோன்று சுப்மன் கில்லும் 15 ஆட்டங்களில் விளையாடி 291 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இருவருமே ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக அவர்கள் இருவரின் மீது கடந்த சில நாட்களாகவே கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இவ்வேளையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் போது கேப்டன் பதவியால் மட்டும் உங்கள் இடம் நிலையாக இருக்காது என்றும் தேர்வுக்குழுவினர் நிச்சயம் கவனம் செலுத்தி சரியான முடிவுகளை அணித்தேர்வில் எடுப்பார்கள் என்றும் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 போட்டிகளை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் மிகச் சிறப்பாக கேப்டன்சி செய்தாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. அவரது பேட்டிங் ஃபார்ம் இந்திய அணியின் முடிவுகளை பாதிக்காது என்றாலும் முக்கியமான தொடர்களில் அவரது பார்ம் என்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

அதேபோன்று சுப்மன் கில்லும் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இப்படி கேப்டன், துணை கேப்டன் இருவருமே தடுமாறி வருவது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் எனவே தேர்வுக்குழுவினர் இவர்கள் இருவரது கேப்டன் பதவியை கருத்தில் கொள்ளாமல் அணித்தேர்வை மட்டுமே முக்கியமாக கொண்டு உலகக்கோப்பை தொடரின் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : அந்த சி.எஸ்.கே வீரரை வாங்க ரிஷப் பண்ட் ரொம்ப ஆசைப்பட்டாரு.. ஆனா முடியல – லக்னோ ஓனர் வெளியிட்ட தகவல்

அதனால் கேப்டன் பதவிகள் இருப்பதினால் யாருக்கும் செலக்சன் என்பது உறுதியானது கிடையாது. நிச்சயம் அவர்களது விடயத்திலும் நிர்வாகம் சரியான முடிவை எடுக்கும் என்றும் மனோஜ் திவாரி அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement