
2024 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் தான் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.
அதற்கு காரணம் யாதெனில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பையை தொடரை இந்திய அணி கடைசி போட்டியில் தவறவிட்டது. அதனால் அடுத்த 2027 ஒருநாள் உலககோப்பையை வென்று விட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவில் ரோஹித் சர்மா இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த அவர் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று கொடுத்திருந்தார். ஆனால் அந்த தொடருக்கு அடுத்து இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோஹித் சர்மாவை இப்படி இந்திய அணியின் நிர்வாகம் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :
ரோஹித் சர்மா ஒரு வீரர்களின் கேப்டன். சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற கையோடு அவர் இளம் வீரர்களுடன் பேசியதை வைத்து பார்த்தாலே அவர் எவ்வளவு வீரர்களுடன் பிணைப்பாக உள்ளார் என்பது தெரியவரும். ஜெய் ஷா கொஞ்சம் மனது வைத்து ரோஹித் சர்மாவை மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதையும் படிங்க : அவங்க 2 பேர் ஆடலனாலும் இந்தியா தான் இந்த டி20 உலககோப்பை ஜெயிக்கும் – தினேஷ் கார்த்திக் கருத்து
என்னை பொறுத்தவரை 2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலககோப்பை வரை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்திருக்கலாம். அந்த அளவிற்கு இன்னும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். சுப்மன் கில்லை விட ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தால் இந்திய அணி இன்னும் நிறைய வெற்றிகளை பெறும் என்றும் மனோஜ் திவாரி கூறியது குறிப்பிடத்தக்கது.