அவங்க 2 பேர் ஆடலனாலும் இந்தியா தான் இந்த டி20 உலககோப்பை ஜெயிக்கும் – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஐ.சி.சி 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்திய அணியே டி20 உலககோப்பையை ஜெயிக்கும் : தினேஷ் கார்த்திக்

ஏற்கனவே 2024 டி20 உலககோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக இந்த 2026 டி20 உலககோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறயிருக்கும் இந்த தொடருக்கு பலமான அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இம்முறையும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த டி20 அணியில் இல்லையென்றாலும் இந்திய அணியே இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :

இந்திய அணியை வீழ்த்துவது என்பது பொதுவாகவே மிக கடினம். அதிலும் குறிப்பாக இம்முறை சொந்த மண்ணில் டி20 உலககோப்பை தொடர் நடைபெறயிருப்பதால் இந்திய அணியை வீழ்த்துவது என்பது இன்னும் மிக கடினம். அந்த அளவிற்கு மிகவும் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி கடந்த பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பலம் என்ன என்பது மற்ற அணிகளுக்கு நன்றாக தெரியும். இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் குவிந்து இருக்கின்றனர். அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்திருப்பதால் இம்முறை நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியா வாஷிங்டன் சுந்தரை தாண்டி அடுத்த பிளானை ரெடி பண்ணியே ஆகனும் – விவரம் இதோ

2026 டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது எதிர்வரும் ஜனவரி 21-ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement