தற்போதைய உலகின் மிகச்சிறந்த பெஸ்ட் பேட்ஸ்மேன் இவர்தான். ஆனால் அது கோலி இல்லை – மனோஜ் திவாரி

Tiwary

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 5 – 6 ஆண்டுகளாகவே போட்டி போட்டுக் கொண்டு பர்பார்ம் செய்து வருகின்றனர். நம்பர் ஒன் இடத்திற்கு போட்டா போட்டி கொண்டு வருகின்றனர். நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது ஸ்டீவ் ஸ்மித்தா என்று ஒரு பக்கம் கிரிக்கெட் உலகம் சுழன்று கொண்டிருக்கும் வேளையில் இந்திய வீரர் மனோஜ் திவாரி மற்றொரு பெயரை இந்த விவாதத்திற்குள் கொண்டுவந்துள்ளார். அவர் தான் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா.

Rohith

இதுபற்றி பேசிய மனோஜ் திவாரி : நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் ரோஹித் சர்மாவின் மன வலிமையைக் கண்டு வியந்தேன். சுப்மன் கில் , புஜாரா , மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நிலையில் ரோகித் சர்மா ஆட்டத்தை கொண்டு போன விதம் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 144 பந்துகளை மேற்கொண்டு ரோகித் சர்மா நிதானமாக செயல்பட்டு விக்கெட்டுகளை தடுத்து நிறுத்தி ஆங்கர் இன்னிங்சான 49 ரன்களை அடித்தார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக தன்னை ரோஹித் சர்மா முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார். தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஆப் ஸ்டம்பை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பி நிற்க ரோஹித் சர்மா ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக வரும் பந்துகளை சரியாக கையாளுகிறார். நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார்.

Rohith 1

அபாரமான ஃபார்மில் உள்ள ரோகித் சர்மா இந்தியாவிற்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தருவார்.இவ்வாறு மனோஜ் திவாரி ரோஹித் சர்மாவை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.

- Advertisement -

rohith 1

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்கிற கணக்கில் வென்ற இந்திய அணி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான கடைசி போட்டியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்திய ரசிகர்களும் ஆவலுடன் காத்து வருகின்றனர்.