முதல்ல தோனி ஃபோனை எடுக்கிறாரா பாருங்க.. கம்பீருடன் 2026 டி20 உ.கோ பார்ட்னர்ஷிப் நல்லாருக்கும்.. திவாரி பேட்டி

Manoj Tiwary
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆசியக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

இதற்கிடையே 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட பிசிசிஐ எம்எஸ் தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்ற தோனி 5 ஐபிஎல் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். அத்துடன் 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் சொந்த மண்ணில் இந்தியா வென்று உலக சாதனை படைத்தது.

- Advertisement -

முதலில் போனை எடுக்கனுமே:

அதனால் சொந்த மண்ணில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தோனி ஆலோசகராக செயல்படுவது உதவிகரமாக இருக்குமென பிசிசிஐ கருதுகிறது. சொல்லப்போனால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார். இருப்பினும் அத்தொடரில் இந்திய அணி சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் விளையாடி வெளியேறியது.

இந்நிலையில் சாதாரண யாரிடமும் அலைபேசியில் பேசும் பழக்கமில்லாத தோனி முதலில் அலைபேசியை எடுக்கிறாரா? என்று பாருங்கள் என்று அந்த செய்தி பற்றி முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். அதே சமயம் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் பார்ட்னர்ஷிப் அமைத்தது போல தோனி – கம்பீர் ஆலோசகர் – பயிற்சியாளராக 2026 டி20 உலகக்கோப்பையில் பார்ட்னர்ஷிப் அமைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கம்பீர் – தோனி:

“அதற்கான பதிலை காலம் மட்டுமே சொல்லும். தோனிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் அவர் ஃபோனை எடுப்பாரா? அவரை அலைபேசியில் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். மெசேஜ்களுக்கு அவர் ரிப்ளை செய்வதும் அரிதானது என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். மெசேஜ் அனுப்பினால் அதை தோனி படிப்பாரா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது”

இதையும் படிங்க: பெஞ்சில் உட்காந்து ஃபோர் அடிக்கும் போது.. என்ன செய்யனும்ன்னு சிராஜ் சொல்லி கொடுத்துருக்காரு.. அர்ஷ்தீப் பேட்டி

“எனவே அந்த வேலையை தோனி ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பது முதல் விஷயம். ஒருவேளை ஆலோசகராக வந்தால் தோனி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிப்பது எனக்கு கடினம். ஒரு வீரர் மற்றும் கேப்டனாக அவர் கொண்டுள்ள அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இப்போதுள்ள புது வீரர்கள் மற்றும் வருங்கால நட்சத்திர வீரர்கள் தோனிக்கு நிறைய மரியாதையைக் கொடுப்பார்கள். தோனி – கம்பீர் பார்ட்னர்ஷிப் அமைப்பதைப் பார்ப்பதும் தகுதியானதாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement