இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. அந்த விமர்சனங்களை சமாளிக்க ரோஹித்தை முன்னே அனுப்பிய கம்பீர் பின்னே இருந்து கொண்டதாக திவாரி விமர்சித்தார்.
மேலும் 2012 ஐபிஎல் கோப்பையை கம்பீர் தனியாளாக வென்று கொடுத்தது போல் விளம்பரம் செய்ததாகவும் திவாரி கூறியிருந்தார். அத்துடன் இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று சொன்ன கம்பீர் இப்போது மோர்னே மோர்கெல், ரியான் டஸ்சேட் ஆகியோரை தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் திவாரி கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வகையில் கௌதம் கம்பீர் நயவஞ்சகர் என்றும் திவாரி விமர்சித்தது ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்தது.
தோனி மாதிரி:
அவருடைய கருத்துக்களை பார்த்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டு என்பது தோனிக்கு போல தாமாக கிடைக்க வேண்டுமே தவிர கேட்டு பெறக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கம்பீர் ஒரு நயவஞ்சகர் என்றும் சொல்வதை செய்வதில்லை செய்வதில்லை என்றும் அவருக்கு ஏன் பாராட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் திவாரி கூறியிருந்தார்”
“இது கேட்காமல் கிடைப்பது முத்து, கேட்டால் கிடைப்பது சுண்ணாம்பு என்ற பழைய வரிகளை எனக்கு நினைவூட்டுகிறது. பாராட்டு என்பது மக்கள் கொடுக்க வேண்டும். கேட்பது வேலையாகாது என்பது என்னுடைய கருத்து. அதற்கு எம்எஸ் தோனி சிறந்த எடுத்துக்காட்டு. கோப்பையை வென்ற பின் எதுவும் சொல்லாத அவர் மற்றொருவரிடம் கொடுப்பார்”
திவாரி விளக்கம்:
“2011 உலகக் கோப்பையை வென்ற போது அவர் சச்சின் பாஜியை முன்னே நிறுத்தினார். அதற்காக நாம் அனைவரும் தோனியை பாராட்டுகிறோம். தோனி எப்போதும் பாராட்டு கேட்டதில்லை” என்று கூறினார். அவருக்கு தற்போது மனோஜ் திவாரி பதிலளித்துள்ளது பின்வருமாறு. “நீங்கள் பாராட்டுகளை கேட்காத தோனியை எடுத்துக்காட்டாக பேசினீர்கள். பாராட்டு என்பதை நீங்கள் சம்பாதிக்க வேண்டும்”
இதையும் படிங்க: பும்ரா இல்லனா மீதியும் காலி.. இந்தியாவை சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் வீழ்த்தும்.. இதுவே 2 காரணம்.. அமீர் பேட்டி
“அதை கேட்டுப் பெறுவதற்கான நோக்கம் இருக்கக்கூடாது. கொல்கத்தா முதல் கோப்பையை வென்ற போது எனது பாராட்டு கிடைக்கவில்லை என்பது போன்ற விஷயங்களை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அந்த வெற்றியால் மக்கள் மனதில் நான் இடம் பிடித்தேன். முதல் கோப்பையை வென்ற போது கொல்கத்தாவில் பேரணி நடந்தது. அதில் எனக்கு மக்கள் நிறைய அன்பை கொடுத்தார்கள்” என்று கூறினார்



