பும்ரா இல்லனா மீதியும் காலி.. இந்தியாவை சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் வீழ்த்தும்.. இதுவே 2 காரணம்.. அமீர் பேட்டி

Mohammed Amir
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் துவங்குகிறது. 2017க்குப்பின் நடைபெறும் அந்தத் தொடரில் பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்க உள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது. அந்த உத்வேகத்துடன் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல அந்த அணி தயாராகி வருகிறது.

மறுபுறம் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் தங்களுடைய கையை ஓங்கி வைத்து வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார். ஏனெனில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு வாய்ப்பு:

அதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவர் காயத்தால் விலகினால் இந்தியாவின் எஞ்சிய வெற்றி வாய்ப்பும் பறிபோக அதிக வாய்ப்புள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் விளையாடி வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

பும்ரா காயம்:

“அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது. ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவிற்கு அடுத்து 23 வயது இளம்வீரரை கேப்டனாக்க விரும்பும் கவுதம் கம்பீர் – யார் அந்த வீரர்?

“இந்தியாவுக்கு அவர் டாப் பவுலராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 – 50 சதவீதமாக குறைந்து விடும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீபத்தில் டெஸ்ட் தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை இம்முறை இந்தியா வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement