என்னை ஒரு ஆளாகவே கொல்கத்தா அணி மதிக்கவில்லை. என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் – மனோஜ் திவாரி புலம்பல்

- Advertisement -

2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை வென்று ஹாட்ரிக் பட்டம் பெறுவதற்காக மோதியது.

manoj-tiwary

- Advertisement -

முதன்முதலில் பட்டத்தை வெல்ல களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அணியின் வீரர்கள் மன்விந்தர் பிஸ்லா 89 ரன்களும், ஜாக்ஸ் காலிஸ் 69 ரன்கள் எடுத்து அந்த அணி கோப்பையை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் மே 27 அன்று இந்த கோப்பையை கைப்பற்றியதாக கொல்கத்தா ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பகிரப்பட்டது.

இதில் உங்களுடைய சிறந்த நினைவுகள் எது என்றும் ரசிகர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பகிரப்பட்டு இருந்தது. இந்த பதிவில் கௌதம் கம்பீர், மன்விந்தர் பிஸ்லா, சுனில் நரேன், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் டேக் செய்யப்பட்டிருந்தனர். இதனை பார்த்த மனோஜ் திவாரி இதுபோன்ற நினைவுகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைய இருக்கிறது.

ஆனால், இந்த பதிவில் என்னையும் ஷகிப் அல் ஹசனையும் டேக் செய்யாதது எங்களை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த கொல்கத்தா அணி… வாய்ப்பேயில்லை மனோஜ், உங்களை டேக் செய்ய மறக்க மாட்டோம். இதற்கான ஒரு புகைப்படத்தில் உங்களை டேக் செய்து இருந்தோம்.

அந்த வெற்றியில் நீங்களும் ஒரு ஹீரோதான் என்று பதிவு செய்திருந்தது. இந்த பதிவை வைத்து தற்போது மனோஜ் திவாரி சின்ன சர்ச்சையை கிளப்பி வருகிறார். மனோஜ் திவாரியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தான் சதம் அடித்தும் இந்திய அணியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக சமீபத்தில் புலம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement