இயற்கை எதிரியாகிடுச்சு.. தப்பான அணியை எடுத்ததே 12 வருட தோல்விக்கு காரணம்.. மனோஜ் திவாரி விமர்சனம்

Manoj Tiwary
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் 12 வருடத்திற்கு பின் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் மழையால் பிட்ச் வேகத்துக்கு சாதகமானதால் இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்ததாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். ஆனால் இரண்டாவது போட்டியில் தவறான பிளேயிங் லெவன் தேர்வு காரணமாக இந்தியா தோற்றதாக அவர் விமர்சித்துள்ளார். அதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மீது அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியது பின்வருமாறு.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

“பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவுக்கு வானிலை இயற்கை மிகப்பெரிய எதிரியாக மாறியது. ஏனெனில் அவர்கள் அங்கே சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்திருந்தார்கள். அங்கே டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றிருந்தது. ஆனால் அவர்கள் ஏன் முதலில் பேட்டிங் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு முன்பாகவே அவர்கள் அணியை தேர்வு செய்திருந்தார்கள்”

“முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பின் அவர்கள் இரண்டாவது போட்டியில் 3 மாற்றங்களை செய்தனர். வாஷிங்டன் சுந்தர் தேர்வு உத்வேகத்தை கொடுக்க கூடியது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்காக குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க மாட்டார் என்று அர்த்தமல்ல. உண்மையில் அவர்கள் தங்களுடைய பேட்டிங்கில் பின்னடைவு இருப்பதாக கருதினார்கள்”

- Advertisement -

தவறான தேர்வு:

“அதனாலேயே வாஷிங்டன் சுந்தரை அவர்கள் லோயர் ஆர்டரில் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த ஒரு தேர்வு வரும் காலங்களில் இந்திய அணியில் நிறைய தேர்வுகளில் தொல்லையை கொடுக்கும். அது சமநிலையுடன் இருக்கும் இந்திய அணியில் வெடிப்புகளையும் ஏற்படுத்தலாம். உங்களிடம் ஏற்கனவே சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் இருக்கிறார். தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கும் அவரையும் நீங்கள் புறக்கணித்தீர்கள்”

இதையும் படிங்க: 234 ரன்ஸ் அடிச்ச புஜாராவை ஆஸி தொடரில் எடுங்க.. எம்எஸ்கே பிரசாத் கருத்துக்கு விஜய் தஹியா பதிலடி

“குல்தீப் யாதவையும் பெஞ்சில் அமர வைத்தீர்கள். பெங்களூருவில் ஆகாஷ் தீப்பை விளையாட வைக்காமல் இரண்டாவது போட்டியில் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் இரண்டாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் அவரிடம் பந்தை கொடுக்கவில்லை. அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவை வைத்து பவுலிங் அட்டாக்கை துவங்கவில்லை. இவை அனைத்தும் உங்களுக்கு பாதகத்தையும் தோல்வியையும் கொடுத்தது” என்று கூறினார்.

Advertisement