- Advertisement -

தமிழ் நடிகையை திருமணம் செய்ய உள்ள மனிஷ் பாண்டே – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன மணிஷ் பாண்டே தற்போது இல்வாழ்க்கையில் இணைய உள்ளார். அவர் தற்போது கர்நாடக அணி சார்பாக விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார். 30 வயதான மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் ஐபிஎல் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் என தொடர்ந்து விளையாடி வரும் இவர் தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டி என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அதன்படி 26 வயதான அஷ்ரிதா ஷெட்டி மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

- Advertisement -

மேலும் அவர் திருமணம் செய்ய இருக்கும் அஷ்ரிதா ஷெட்டி தமிழில் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் மற்றும் உதயம் nh4 ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சித்தார்த்துடன் காதலியாக நடித்த உதயம் nh4 படம் அவருக்கு தமிழில் ஒரு பிரபலத்தை கொடுத்தது எனலாம்.

அஷ்ரிதா ஷெட்டி பெங்களூருவை பூர்விகமாக கொண்டவர் மேலும் மனிஷ் பாண்டேவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by