எங்கள் அணியில் இந்த ஒரு விஷயம் பத்தி நிறைய கேள்வி இருந்தது – ஆட்டநாயகன் மனிஷ் பாண்டே வெளிப்படை

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

srhvsrr

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

SRH

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் மனிஷ் பாண்டே கூறியதாவது : இந்த தொடரில் எங்களது அணியின் மிடில் ஆர்டர் குறித்து அதிக அளவு பேச்சுகள் எழுந்தன. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய தருணத்தில் இருந்தோம். நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பி விளையாடினேன். அது இன்றைய போட்டியில் நடந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு எங்கள் இருவரது பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

Shankar

வெற்றிக்கு பிறகு இங்கே நிற்பதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆர்ச்சருக்கு எதிராக எங்களது திட்டம் இன்று சிறப்பாக செயல்பட்டது. விஜய் சங்கர் என்னுடன் நீண்டதொரு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார். நம்பர் 4 இடத்திற்கு அவர் முன்னேறி வந்து இதுபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெற நாங்கள் விரும்புவதாக மனிஷ் பாண்டே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement