இவர் 30 பந்துகளுக்கு மேல பேட்டிங் விளையாடுனாலே சன் ரைசர்ஸ் டீம் தோத்துடுமா ? – வெளியான புள்ளி விவரம்

pandey

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க விராட்கோலி 33 ரன்களை குவித்தார். அதன்பின்னர் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மட்டும் ஒரு பக்கம் தனியாக நின்று 41 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரி 59 ரன்கள் குவித்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

maxwell

மேக்ஸ்வெல் என்ற தனி ஒருவரின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி துவக்கத்தில் சஹா விக்கெட்டை ஒரு ரன்னில் இழந்தாலும் வார்னர்(54) மற்றும் மணிஷ் பாண்டே(38)ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 16 ஓவர்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த சன்ரைசர்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீதமிருந்த 4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

குறிப்பாக சபாஷ் அகமது வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை பெங்களூரு அணியின் பக்கம் கொண்டு வந்தார். பின்னர் இறுதி நேரத்தில் ரஷீத் கான் 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ரன் அவுட்டாக பரபரப்பான இந்த போட்டியில் 20வது ஓவரின் கடைசி பந்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசிய 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோன்று ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

siraj

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியின் வீரரான மணீஷ் பாண்டே 39 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்று நீங்கள் கேட்டால் அவர் முப்பது பந்துகளுக்கு அதிகமாக சந்தித்தால் சன்ரைசர்ஸ் அணி கடந்த 3 ஆண்டுகளாக தோற்று வருகிறது என்ற புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

pandey 1

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் அணிக்காக 14 முறை மணிஷ் பாண்டே முப்பது பந்துகளைகடந்து விளையாடியுள்ளார். அப்படி அவர் 30 பந்துகளை கடந்து விளையாடிய 14 போட்டிகளில் 11 போட்டிகள் சன்ரைசர்ஸ் அணி தோற்று உள்ளது. இதனால் 30 பந்துகளை மணிஷ் பாண்டே சந்தித்தாலே நிச்சயம் உங்களுக்கு தோல்வி தான் என்பது போல ரசிகர்கள் இந்த செய்தியை அதிகளவு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.