இந்திய கப்பலை மூழ்கடிச்சு சூர்யவன்சியை வேஸ்ட் பண்ணதை எழுதுறீங்களா? கோச் ஜோசியை விளாசிய மணிந்தர்

Maninder Singh
- Advertisement -

கத்தாரில் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நவம்பர் 21ஆம் தேதி தோகாவில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை சூப்பர் ஓவரில் தோற்கடித்த வங்கதேசம் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச ஏ அணி 20 ஓவரில் 194/6 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணியும் சரியாக 20 ஓவரில் 194/6 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அப்போது வீசப்பட்ட சூப்பர் ஓவரில் 38 (15) மற்றும் 44 (23) ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் வைபவ் சூர்யவன்சி, பிரியான்ஸ் ஆர்யா ஓப்பனிங் வீரர்கள் இந்தியாவுக்கு களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாமல் தாமே களமிறங்கிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து முதல் பந்திலேயே போல்ட்டானார்.

- Advertisement -

கப்பல் மூழ்கிடுச்சு:

அடுத்து வந்த அசுட்டோஸ் சர்மாவும் பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து டக் அவுட்டானதால சூப்பர் ஓவரில் இந்தியா 0/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக விளையாடிய வங்கதேசமும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. ஆனால் 2வது பந்தில் இந்திய பவுலர் சூயஸ் ஒய்ட் போட்டதால் எளிதாக வென்ற வங்கதேசம் ஃபைனலுக்கு சென்றது.

மறுபுறம் சூப்பர் ஓவரில் 1 ரன் கூட அடிக்க முடியாமல் இந்தியா தோற்றதைப் பார்த்த சூரியவன்சி சோகத்தில் ஆழ்ந்தார். இத்தொடரில் சிக்சர்களை மழையாக பொழிந்த அவர் 400+ ரன்கள் குவித்து அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவரை விளையாட வைக்காத இந்திய அணியின் பயிற்சியாளர் சுனில் ஜோசி தோல்வியின் முடிவில் தம்முடைய புத்தகத்தில் எதையோ குறிப்பாக எழுதினார்.

- Advertisement -

நேரலையில் விமர்சனம்:

அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “இந்தியா ஏ அணியினர் என்ன சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் முயற்சிக்கிறேன். அவர்கள் ஏன் சூரியவன்சியை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை? இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் சுனில் ஜோசி பேப்பரில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்? கப்பல் ஏற்கனவே மூழ்கி விட்டது” என்று வேதனையுடன் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 132க்கு அவுட்.. 89 வருட சாதனையை உடைத்த ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக வரலாற்று சாதனை.. ஆஸி திணறல்

அது பற்றி போட்டியின் முடிவில் கேட்டதற்கு சூரியவன்சி, பிரியான்ஸ் ஆர்யா ஆகியோர் பவர்பிளேவில் மட்டுமே மாஸ்டர்கள் என்று கேப்டன் ஜிதேஷ் சர்மா தெரிவித்தார். ஆனால் டெத் ஓவர்களில் தாம், அசுட்டோஸ் சர்மா, ரமந்த்தீப் சிங் ஆகியோர் தான் சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர்கள் என்றும் அவர் கூறினார். அதனாலேயே சூர்யவன்சி, பிரியான்ஸ் ஆர்யா ஆகியோரை விளையாட வைக்கவில்லை என்றும் அவர் கூறியது ரசிகர்களை வெறுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement