எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிகள் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும் இடம் பிடித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்த வருண் சக்கரவர்த்தி இம்முறை ஆசிய கோப்பை தொடரிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற உதவுவார் என்று பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு ஆதரவும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
வருண் சக்ரவர்த்தி புத்திசாலித்தனமான பவுலர் : மனீந்தர் சிங்
அதோடு அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக வருண் இடம்பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மனீந்தர் சிங் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அற்புதமாக செயல்பட்டிருந்தார். அதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. இந்த ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் அவர் ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
ஏனெனில் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் மிகவும் வித்தியாசமான திறமை கொண்ட ஒரு சுழற்பந்து வீச்சாளராக நான் அவரை பார்க்கிறேன். வெளியில் இருந்து வருண் சக்கரவர்த்தியை பார்க்கும்போது அவர் பிளாங்காக எந்த திட்டத்தையும் யோசிக்காமல் இருக்கிறார் என்று தோன்றும். ஆனால் உண்மையில் அவர் ஒரு நல்ல புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர்.
மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளரான அவர் எந்த மைதானத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும்? எந்த பேட்ஸ்மேன்களுக்காக எதிராக எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பதை தற்போது முற்றிலுமாக புரிந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி மாற்றத்தால் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்பு.. அதிரடியாக எகிறும் டிக்கெட் விலை.. விவரம் இதோ
எனவே அக்சர் படேல், குல்தீப் யாதவை காட்டிலும் வருண் சக்கரவர்த்தி இந்த ஆசிய கோப்பை தொடரில் ஜொலிப்பார் என்று நம்புகிறேன். அதனால் நிச்சயம் அவரே இந்த ஆசிய கோப்பை தொடரில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் மனீந்தர் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



