இந்திய நேரப்படி இங்கிலாந்தில் மழை எந்த அளவிற்கு இருக்கும் – வானிலை ரிப்போர்ட் முழுவிவரம் இதோ

Rain
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

Pitch

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நேற்று முழுவதும் போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டதால் ரிசர்வ் டே ஆன இன்று விளையாட உள்ளது. எந்த இடத்தில் அவர்கள் ஆட்டத்தை கைவிட்டார்களோ அதே இடத்திலிருந்து ஆட்டத்தை தொடருவார்கள். இந்த ஆட்டம் முழுமையாக நடந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Rain

இந்நிலையில் இன்று மான்செஸ்டர் நகரின் வானிலையை பொறுத்து மைதானத்தில் மழை எந்த அளவிற்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 3 மணி அளவில் 12% சதவீத அளவிற்கும், 5 மணிக்கு 24 சதவீத அளவிற்கும், 7 மணிக்கு 24 சதவீத அளவிற்கும், 9 மணிக்கு 17 சதவீத அளவிற்கும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement