- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அறிமுக போட்டியிலேயே 7 ஆவது இந்திய வீரராக மானவ் சுதர் மாபெரும் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூன் 6-ஆம் தேதி நியூ சண்டிகர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர்.

அறிமுக போட்டியிலேயே மாபெரும் சாதனை நிகழ்த்திய மானவ் சுதர் :

அதேபோன்று சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். அதனை தொடர்ந்து தங்களது முதல்இன்னிங்க்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பின்னர். பாலோ ஆன் பெற்று தங்களது இரண்டாவது இன்னிங்சை ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசிய மானவ் சுதர் முதல் இன்னிங்சின் போது 22 ஓவர்களை வீசி 10 மெய்டன் மற்றும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் ஏழாவது இந்திய சுழற்பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது அறிமுக வீரராக களமிறங்கிய மானவ் சுதர் தனது முதல் இன்னிங்ஸ்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அறிமுக போட்டியில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதை மட்டுமே கொஞ்சம் ஸ்டெடி பண்ணிக்கிட்டா மானவ் சுதர் நல்ல பிளேயராக தொடர்வார் – சுனில் கவாஸ்கர் பாராட்டு

அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அறிமுக போட்டியில் ஐந்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பத்தாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கடைசியாக இந்த சாதனையை அமித் மிஸ்ரா நிகழ்த்தியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து மானவ் சுதர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -