தீபக் மற்றும் ராகுல் சாகர் ஆகியோரின் தங்கை எந்த ஐ.பி.எல் அணிக்கு சப்போர்ட் தெரியுமா ? – விவரம் இதோ

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடி வருபவர் தீபக் சஹர். சென்னை அணிக்காக பல போட்டிகளில் நன்றாக விளையாடி விக்கெட்டுகளை குவித்து வருபவர் தீபக் ஆவார். இந்த தொடரில் சென்னை அணிக்காக முதல் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை என்றாலும் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக பந்துவீசி தற்போது 8 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

chahar

அதேபோல இவரது தம்பி ராகுல் சஹர். இவர் மும்பை அணிக்காக சமீப சில வருடங்களாக மிக அற்புதமாக விளையாடிய தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வருகிறார். குறிப்பாக இந்த ஆண்டு மிக அற்புதமாக பந்துவீசி இதுவரை நடந்துள்ள நான்கு போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர்கள் இருவரின் தங்கையான மால்டி சஹர், அண்ணன் இருவரில் யாருக்கு ஆதரவு என்கிற கேள்வி எழுந்த நிலையில் தனது பதிலை வெளியிட்டுள்ளார். மால்டி சஹர் ஒரு பிரபலமான மாடல் ஆவார். இவர் சமூக வலைதளங்களில் மிக அதிக அளவில் காணப்படுவார். எப்பொழுதும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். அதன்படி சமீபத்தில் மஞ்சள் நிற ஆடையை அணிந்து சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று ஒரு பதிவிட்டுள்ளார்.

Chahar 1

அதன்படி பார்க்கையில் தங்கை மூத்த அண்ணன் ராகுல் விளையாடும் சிஎஸ்கே அணிக்கு தான் ஆதரவு அளித்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.ந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இதற்கு முன் நடந்த ஐபிஎல் தொடர்களில் இவர் சிஎஸ்கே அணிக்காக, அந்த அணி விளையாடும் அனைத்து போட்டிகளில் மைதானத்திற்கு சென்று தன்னுடைய ஆதரவை அளித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

malti 1

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தொடரில், மைதானத்திற்கு சென்று ஆதரவு அளிக்க முடியாததால் வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார். புள்ளி பட்டியலில் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் மும்பை அணி நான்காவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.