கோப்பையை வெல்ல கோலிக்கு இந்த உரிமையை வழங்குங்கள் – விஜய் மல்லையா வேண்டுகோள்

Kohli
- Advertisement -

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி கடந்த 12 வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று சீசனில் மிக மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளனர்.

kohli

இந்த நிலையில் 13வது ஐபிஎல் தொடரில் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் . இதற்காக அந்த அணி புதிதாக வடிவமைக்கப்பட்ட லோகோவை வெளியிட்டுள்ளது அந்த அணி. இதுகுறித்து பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ளதாவது..

புதிய லோகோ சிங்கம் கர்ஜிப்பது போல் ஒன்று மிக அருமையாக உள்ளது. ஆனால் இந்த முறையாவது கோப்பையை வென்று பெங்களூருக்கு கொண்டு வாருங்கள். 19 வயதிற்குட்பட்ட அணியிலிருந்து ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஆடுகிறார் விராட் கோலி. அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார்.

Kohli 1

ஆனால் பெங்களூரு அணியில் அது முடியவில்லை. அணியை வழி நடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கண்டிப்பாக அவரிடம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்து விட்டால் அவர் கோப்பையை வென்று கொடுப்பார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் விஜய் மல்லையா

Advertisement