தெரியாம சொல்லிட்டேன். இப்போதைக்கு எனக்கு ஓய்வு வேணாம். நான் விளையாடனும் – பேக் அடித்த இலங்கை வீரர்

Malinga-2
- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது வித்தியாசமான பௌலிங் ஸ்டைல் மற்றும் துல்லியமான யார்க்கர் மூலமாகவும் உலகளவில் புகழ்பெற்றார். மேலும் பல்வேறு நாடுகளிலும் விளையாடி உள்ள அவர் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் ஒரு பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

- Advertisement -

றிப்பாக டி20 போட்டியில் அவர் ஒரு மதிப்பு மிக்க வீரராக இன்றளவும் பார்க்கப்படுகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் மலிங்கா. இதுவரை இலங்கை அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது தான் டி-20 இல் மட்டும் 2020ஆம் ஆண்டு வரை விளையாட இருப்பதாகவும் அதன் பின்னர் ஓய்வு பெற விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மலிங்கா தனது டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஓய்வு முடிவினை வாபஸ் வாங்கியுள்ளார். இதுகுறித்து மல்லிகா கூறுகையில் : டி20 கிரிக்கெட் போட்டியில் நான் 2020 ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வரை விளையாடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

malinga

அதன் பின்னர் ஓய்வு எடுக்கும் முடிவை வைத்திருந்த நான் இப்போது என் எண்ணத்தை மாற்றி உள்ளேன். ஏனெனில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 ஓவர்கள் தான் வீச வேண்டும் அதனால் என்னால் இன்னும் இரண்டு ஆண்டுகள் சேர்த்து டி20 போட்டிகளில் விளையாட முடியும் என்று நம்புகிறேன்.

Malinga

உலக அளவில் பல நாடுகளில் நான் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளேன். அதனால் எனக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் தற்போது ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன் என்று மலிங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement