தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் இதற்காக நிச்சயம் விளையாட வேண்டும் – மலிங்கா

Malinga
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் .

Dhoni

- Advertisement -

தோனி குறித்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான மலிங்கா தோனி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணிக்கு தோனி மிக அவசியமான ஒரு வீரர் ஆவார். அவர் உலக கோப்பை தொடர் முடிந்து மேலும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். ஏனெனில் அவர் ஒரு சிறந்த பினிஷர் அவரை போன்ற வீரர் இந்திய அணிக்கு கிடைக்கும் வரை இந்திய அணியில் தோனி இருக்க வேண்டும்.

dhoni 2

இன்னும் 2 ஆண்டுகளில் தோனியின் வேலையை செய்யும் திறமையான வீரரை கண்டுபிடித்து அவரை தோனி இடத்தில் ஆட வைக்கும் வரை தோனி இந்திய அணியில் ஓய்வு பெறாமல் ஆட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றும், இப்போதும் தோனி மிகச்சிறந்த பினிஷராக இருக்கிறார் என்றும் மலிங்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement