இவரின் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. என்னை தாண்டிவிட்டார். இந்திய பவுலரை புகழ்ந்த – மலிங்கா

Bumrah

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் மற்றும் துல்லியமான யார்க்கர் மூலம் கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் விளையாடும் மலிங்கா டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரையும் வைத்துள்ளார்.

Malinga

இவரது பந்துவீச்சுக்கு இன்றுவரை பேட்ஸ்மென்கள் திணறுவது உண்மையான ஒரு விடயம்தான் இந்நிலையில் தற்போது மலிங்கா அளித்த பேட்டி ஒன்றில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை புகழ்ந்து பேசியுள்ளார். அதன்படி மலிங்கா குறித்து கூறியதாவது : 2013 ஆம் ஆண்டு பும்ரா மும்பை அணியில் பங்கேற்றார்.

அப்போதிலிருந்து அவரது தனித்துவமான பௌலிங் ஆக்ஷனை பார்த்த நான் அவருக்கு எனது ஆலோசனைகளை வழங்கினேன். தற்போது உலகின் நம்பர்-1 ஆக வளர்ந்து நிற்கும் பும்ராவையும் அவரது இந்த வளர்ச்சியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அதே போன்று அவரது கிரிக்கெட் வாழ்வில் நான் ஆலோசனை வழங்கியுள்ளது மிக மகிழ்ச்சியான விடயம் ஒரு இளம் வீரருக்கு என்னால் முடிந்தவற்றை நான் பகிர்ந்துள்ளேன்.

Bumrah

என்னைக் காட்டிலும் அவர் பந்து வீச்சில் அதிக திறன்களை வைத்துள்ளார். அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கும் வேட்கையில் அவர் உள்ளார். யார்க்கர் பந்து வீசுகிறார் அதிலும் ஸ்லோவாக வீசுகிறார் அது எப்படி முடிகிறது என்று என்னால் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் விக்கெட் வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறார் மட்டும் என்று தெரிகிறது என்று கூறினார். இவர்கள் இருவரும் மீண்டும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் பங்கேற்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -