தனது கடைசி போட்டியிலும் 3 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தி அமர்க்களமாக விடைபெற்ற யார்க்கர் மன்னன் மலிங்கா – விவரம் இதோ

Malinga-2
- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது.

Malinga

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. குசால் பெரேரா 111 ரன்கள் அடித்தார், குஷால் மெண்டீஸ் 43 ரன்களும் மற்றும் மேத்யூஸ் 48 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 41.4 அவர்களின் 223 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது இதனால் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரரான மலிங்காவின் கடைசி ஒருநாள் போட்டி ஆகும். ஏனெனில் இந்த போட்டிக்கு முன்பாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்த மலிங்கா இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான தமிம் இக்பால் ரன்கள் எடுக்காமலும், சவுமியா சர்க்கார் 15 ரன்களும் எடுத்து மலிங்கா பந்துவீச்சில் போல்டு ஆனார்கள்.

மலிங்கா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் தனது கடைசி போட்டியில் விளையாடிய மலிங்கா சிறப்பாக பந்து வீசி மட்டுமின்றி இலங்கை அணி வீரர்களின் சிறப்பான வழி அனுப்புதலோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 35 வயதான மலிங்கா இதுவரை 226 ஒருநாள் போட்டியில் விளையாடி 338 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மலிங்கா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து டி20யில் விளையாட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement