சர்ச்சைக்கு உண்டான மலிங்காவின் நோபால். வெளியான வீடியோ ஆதாரம் – வீடியோ உள்ளே

Malinga
- Advertisement -

நேற்றைய போட்டியில் 20 ஆவது ஓவரில் பெங்களூரு அணி ஜெயிக்க 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த வரின் முதல் பந்தினை சிக்சருடன் துவங்கினார் துபே ஆனால், அந்த ஓவரில் பெங்களூரு அணியால் மொத்தம் 10 ரன்களே குவிக்க முடிந்தது. இந்த ஓவரினை வீசிய மலிங்கா கடைசி பந்தினை நோபாலாக வீசினார். இதனை அம்பயர் கவனிக்க வில்லை. ஆனால், டிவி ரிப்ளெயில் அது நோபால் என தெரிய வந்தது. இதோ அந்த நோபால் வீடியோ :

- Advertisement -

இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டபடி உள்ளனர். ஒருவேளை அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டு அடுத்த பந்தினை சிக்ஸர் அடித்திருந்தால் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கும். நடுவரின் இந்த கவனக்குறைவினால் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Divilliers

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement