- Advertisement -
உலக கிரிக்கெட்

ENG vs SL : உலகக்கோப்பை தொடரில் உலகசாதனை படைத்த மலிங்கா – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 232 இரண்டு அடித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பிறகு 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களுக்கு 43 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் இந்த போட்டியில் 3 ஆவது விக்கெட்டை கைப்பற்றும்போது குறைந்த போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மலிங்கா படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by