CSK vs MI : ஒரே பந்தில் வரலாறு படைத்த மலிங்கா. மும்பை அணியின் வெற்றி குறித்த குறிப்பு – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Malinga
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

MI

இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டதால் வெற்றி மும்பை அணிக்கா அல்லது சென்னை அணிக்கா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அப்போது ரோஹித் எடுத்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதாவது முதல் 3 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்த மலிங்காவை இருபதாவது ஓவரை வீச அழைத்தார். அதேபோன்று அவரை நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக தனது அனுபவத்தைப் பயன்படுத்தி கடைசிவரை பிரமாதமாக வீசினார்.

- Advertisement -

malinga 1

அதுவும் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் ஓடினால் கூட போட்டி டிராவில் முடிந்து விடும். இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி பெற ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் இருந்தது. அந்த வாய்ப்பு கடைசி பந்தில் விக்கெட் தனது அனுபவத்தை சரியாக பயன்படுத்திய மலிங்கா அந்த கடைசி பந்தை ஸ்லோவாக வீசி தாகூரை எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக்கினார்.

malinga 2

இந்த பந்தில் விக்கெட் விழாமல் ஒரு ரன் கிடைத்திருந்தால் கூட சூப்பர் ஓவரில் ஆட்டம் மாறி இருக்கும் எனவே ஒரே பந்தில் வரலாறு படைத்திருக்கிறார் மலிங்கா. அவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக மும்பை அணி 4 ஆவது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த பல ஆண்டுகளாக இவர் மும்பை அணிக்காக சிறப்பாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement