டி20 போட்டியில் சிறப்பான சாதனையை படைத்த மலிங்கா. பிரமாண்ட சாதனைக்கு இன்னும் ஒரு விக்கெட் தான் பாக்கி – விவரம் இதோ

Malinga-1
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சமீபத்தில் ஒருநாள் போட்டிகளி லிருந்து ஓய்வு பெற்றார். யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Malinga

- Advertisement -

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடந்தது.

இந்த டி20 போட்டியில் கலந்துகொண்ட மலிங்கா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் அப்ரிடியை பின்னுக்குத்தள்ளி மலிங்கா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அப்ரிடி இதுவரை 98 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.

Malinga

இந்நிலையில் தனது 74வது டி20 போட்டியில் விளையாடிய மலிங்கா 99 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்திற்கு வந்துள்ளார். மேலும் இன்னும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டி20 போட்டியில் முதல் வீரராக 100 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பிரமாண்டமான சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement