நான் கருப்பர் என்பதால் தனிமையை உணர்ந்தேன். சகவீரர்களே என்னை தன்மை படுத்தினர் – சீனியர் வீரர் புலம்பல்

Ntini
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1998 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் மகாயா நிதினி. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று வருடங்கள் விளையாடியிருக்கிறார். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட விளையாடிய முதல் கருப்பின வீரர் ஆவார்.

Nitini 2

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளரான இவர் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 390 விக்கெட்டுகளும் 173 ஒருநாள் போட்டிகளில் 256 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தான் விளையாடிய காலகட்டத்திலும் தனது சக வீரர்களை நிறத்தின் காரணமாய் பாகுபாடு காட்டி தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் வைத்திருந்ததாக பேசியுள்ளார் மகாயா நிதினி.

இவர் இவருடைய காலத்தில் ஷான் பொல்லாக், ஜாக் காலிஸ், ஆலன் டொனால்ட்,லான்ஸ் குளூஸ்னர், கிரேமே ஸ்மித் ஆகியோர் விளையாடினர். அவர் கூறுகையில்… நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய போது தனிமையை மட்டுமே உணர்தேன். எப்போதும் தனிமையிலேயே தான் இருந்தேன். இரவு விருந்திற்கு போகலாம் என்று எந்த வீரரும் என்னை அழைத்த தில்லை.

Nitini1

இத்தனைக்கும் என் முன்னால் அமர்ந்து கொண்டு தான் பேசுவார்கள் ஆனால் என்னை மட்டும் அழைக்கவே மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை தான் அணிகிறோம், ஒன்றாகவே விளையாடுகிறோம், ஒன்றாகவே பயிற்சி எடுக்கிறோம். தேசியத்தை பாடுகிறோம். ஆனாலும் சக வீரர்களிடம் பாகுபாட்டுடன் தான் நடந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக நான் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதை தவிர்த்துவிட்டு வேகவேகமாக தனியே மைதானத்திற்கும் ஹோட்டல் அரைக்கும் ஓடுவேன். என்னுடைய கஷ்டம் எப்போதும் அவர்களுக்கு புரிந்ததில்லை. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி வரும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.

Ntini 2

ஆனால் தோற்கும் போது என்னைத்தான் முதலில் குறை கூறுவார்கள். ஜூனியர் கிரிக்கெட்டில் இருந்து இந்த நிறைவேறி பிரச்சனையை நான் சந்தித்து வருகிறேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மகாயா நிதினி..

Advertisement