நேற்றைய போட்டியில் பங்கேற்று திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் – ரசிகர்கள் ஷாக்

Mahmudullah
- Advertisement -

வங்கதேச அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்த முதல் இன்னிங்சில் 468 ரன்களை குவித்துள்ளது.

ban 2

- Advertisement -

அந்த அணியில் அதிகபட்சமாக அனுபவ வீரர் முகமுத்துல்லா 278 ரன்கள் பந்துகளில் 150 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 276 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை விளாசிய முகமதுல்லா திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ஓய்வு அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான செய்தியில் : இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நான் நீடிக்க விரும்பவில்லை என முகமதுல்லா கூறியுள்ளார். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட அவர் ஓய்வு முடிவை வெளிப்படையாக தெரிவித்தார் என்றும் மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இதை முறைப்படி தெரிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2764 ரன்கள் குவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான அவர் தற்போது வரை அந்த அணியில் முன்னணி வீரராக விளையாடுவது மட்டுமின்றி அனுபவ வீரராகவும் இருந்து வருகிறார்.

ban 2

பின்வரிசையில் இறங்கி வங்கதேச அணிக்கு வலிமை சேர்த்து வந்த இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து உள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement