தோனி தான் எனது ரோல் மாடல். அவரைப்போலவே நான் வங்கதேச அணிக்காக விளையாட நினைக்கிறன் – வங்கதேச வீரர் அதிரடி

Mahmudullah
- Advertisement -

கொரோனோ வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக கிடைத்த ஓய்வு நேரத்தை தற்போது சமூக வலைத்தளம் வழியாக பகிர்ந்து வரும் அவர்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும், தங்களது அனுபவத்தை சக வீரர்களுடன் நேரலையில் பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

Mahmudullah 1

- Advertisement -

இவ்வாறு வீரர்கள் பகிரும் அனுபவங்களில் தோனியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் பேசிவருகின்றனர். மேலும் பிரபலங்கள் வேறு எதையாவது பேசினால் கூட அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தொகுப்பாளர்கள் அல்லது செய்தி தொகுப்பாளர்கள் அதனை முன்வைத்து விடுகின்றனர்.

இதனால் பேட்டி அளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தை பேசி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் முகமதுல்லா கிரீக் ஃபென்ஸி என்ற இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் தோனி குறித்து அவர் பேசுகையில் : நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவரும் இந்திய அணிக்காக ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் தான் களமிறங்குகிறார்.

Mahmudullah 2

அவர் ஆட்டத்தை கட்டுப்படுத்தி செல்லும் விதம் அலாதியானது. நானும் வங்கதேச அணிக்காக ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் பின்வரிசையில் இறங்குவதால் அவரைப் போலவே விளையாட ஆசைப்படுகிறேன். நான் எப்போதெல்லாம் தனியாக இருக்கிறாயோ அப்போதெல்லாம் தோனியின் ஆட்டத்தை பார்ப்பேன். அதன் மூலம் ஆட்டத்தை எவ்வாறு கையாண்டு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொண்டேன் என்றும் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய முகமதுல்லா: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ரன்கள் சராசரி வைத்திருப்பதும், அதேபோன்று 90க்கு மேல் ஸ்ட்ரைக்ரேட் வைத்திருப்பதும் சாதாரணமான விடயமல்ல. இந்த விடயங்கள் எவ்வாறு போட்டியின் இறுதி கட்டம் வரை தன் கையில் வைப்பது என்பதை காண்பிக்கிறது. தோனி இவை அனைத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம் எனவே நான் தோனியிடம் கற்றுக்கொண்டவை இவைதான் என்று முகமதுல்லா கூறினார்.

Mahmudullah 3

மேலும் தோனி கிரிக்கெட் அரங்கில் பலருக்கும் தற்போது தூண்டுதலாக திகழ்கிறார் என்றும் தோனி குறித்து முகமதுல்லா புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் இதற்கு விமர்சையான கருத்துக்களை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement