பாக்க முடியல.. ஆர்சிபி நல்லதுக்கு சொல்றேன்.. பேசாம அதை செஞ்சுடுங்க.. பிசிசிஐ’க்கு மகேஷ் பூபதி கோரிக்கை

Mahesh Bhubathi
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி ஆகியோருடைய தலைமையில் ஃபைனல் வரை சென்று முக்கிய நேரத்தில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டு வரும் அந்த அணி கடந்த சில வருடங்களாக ஃபப் டு பிளேஸிஸ் தலைமையில் விளையாடி வருகிறது.

ஆனால் அவருடைய தலைமையிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே திண்டாடியதால் சூரியன் மேற்கே உதித்தாலும் ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் எழுந்தன. அந்த சூழ்நிலையில் கடந்த வருடம் துவங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. அதனால் இம்முறை ஆடவர் ஐபிஎல் தொடரிலும் நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிரணி ரசிகர்களுக்கு சவால் விட்டனர்.

- Advertisement -

பிசிசிஐக்கு கோரிக்கை:
ஆனால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அந்த அணிக்கு வழக்கம் போல இம்முறையும் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோரால் பேட்டிங் ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் தான் வள்ளல் பரம்பரையாக ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்து வருகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி ஆர்சிபி பவுலர்களை அடித்து நொறுக்கி 287 ரன்கள் குவித்தது. அதனால் ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய அணி என்ற மோசமான சாதனையும் பெங்களூரு படைத்தது. அதை சேசிங் செய்த இதை பெங்களூருவுக்கு விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் தோல்வி கிடைத்தது.

- Advertisement -

அத்துடன் ஏற்கனவே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோர் (49 ஆல் அவுட்) பதிவு செய்த அணியாக பெங்களூரு சாதனை படைத்ததுள்ளதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் இப்படி மோசமாக விளையாடி வரும் பெங்களூரு அணியை பேசாமல் வேறு உரிமையாளருக்கு விற்று விடுமாறு பிசிசிஐ’க்கு முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க நினச்சு பாக்காத முடிவை தோனி எடுக்கப் போறாரு.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு வாசிம் ஜாஃபர் சொன்ன குட் நியூஸ்

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விளையாட்டு, ஐபிஎல், ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நலனுக்காக ஆர்சிபி அணியை பிசிசிஐ புதிய உரிமையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மற்ற அணிகள் செய்ததைப் போல அக்கறையுடன் ஒரு விளையாட்டு அணியை நிர்வகிக்கும் உரிமையாளரிடம் ஆர்சிபி’யை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement