நீங்க நினச்சு பாக்காத முடிவை தோனி எடுக்கப் போறாரு.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு வாசிம் ஜாஃபர் சொன்ன குட் நியூஸ்

Wasim Jaffer 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அந்த அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் தோனி ஒப்படைத்துள்ளார்.

மேலும் 42 வயதாகும் அவர் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் லேசான முழங்கால் வலியுடன் விளையாடி வருகிறார். ஆனால் இந்த வயதிலும் டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 37* (16) ரன்களை விளாசிய அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸருடன் 20* ரன்கள் அடித்து வயதானாலும் தம்முடைய ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

குட் நியூஸ்:
கடைசியில் அவர் அடித்த 20 ரன்கள் வித்தியாசத்தில் தான் மும்பையை தோற்கடித்து சென்னை வென்றது. அந்த வகையில் இவ்வளவு காலங்கள் கடந்தும் மேட்ச் வின்னராக செயல்படும் தோனிக்கு சென்னை முதல் மும்பை வரை சிஎஸ்கே விளையாடும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் மெகா ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஏனெனில் 42 வயதாகும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் எப்போதுமே அனைவரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளை எடுப்பதில் தோனி வல்லவர் என இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது அனைவரும் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்ப்பாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைவரும் நினைத்துப் பார்க்காத வகையில் தோனி அடுத்த வருடமும் விளையாடுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“எம்எஸ் தோனி எப்போதும் யாரும் எதிர்பார்க்காத விஷயங்களையே செய்துள்ளார். குறிப்பாக வெவ்வேறு வகையான ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி அவர் எப்போதும் எதிர்பார்க்காத முடிவுகளையே எடுத்துள்ளார். தற்போது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இப்போது அவர் என்ன செய்வார் என்ற மீதி அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பெஞ்சில் 45 கோடி.. பிளேயர்ஸ் மேல தப்பில்ல.. ஆர்சிபி தோல்விக்கு அவங்க தான் காரணம்.. ஸ்ரீகாந்த் விளாசல்

அவரின் இந்த பதிவு சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சொல்லப்போனால் அவர் கூறுவது போல 2021 முதலே தோனி ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு வருடமும் காணப்படுகிறது. இருப்பினும் ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாடும் தோனி அடுத்த வருடமும் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

Advertisement