- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து மண்ணில் சாய் சுதர்சன் அசத்துவார்.. காரணத்தை சொல்லி பாராட்டிய – மஹேலா ஜெயவர்த்தனே

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த முதன்மை இந்திய அணியில் சுப்மன் கில் தலைமையில் 18 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திலும் சாய் சுதர்சன் அசத்துவார் : மஹேலா ஜெயவர்த்தனா

ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவர்களுக்கு பதிலாக முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே இந்திய அணி இருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நிச்சயம் இந்திய அணிக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இலங்கை கேப்டனுமான மஹேலா ஜெயவர்த்தனேவும் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இடது கை ஆட்டக்காரரான அவரிடம் எல்லாவிதமான ஷாட்டுகளும் இருக்கின்றன. மேலும் டெக்னிக்கலாகவும் அவர் மிகவும் வலுவாக இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் நிச்சயம் சவாலான இங்கிலாந்து மைதானங்களில் கூட அவரிடம் உள்ள ஸ்கில்களை வைத்து அவரால் நிச்சயம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஏற்கனவே இங்கிலாந்தில் அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் கை கொடுக்கும்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரெடிராகும் வகையில் கே.எல் ராகுல் எடுத்துள்ள அதிரடி முடிவு – விவரம் இதோ

சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் அசத்துவார் என ஜெயவர்த்தனே அவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் 15 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் சராசரியுடன் 759 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஆறு அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும்.

- Advertisement -