இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரெடிராகும் வகையில் கே.எல் ராகுல் எடுத்துள்ள அதிரடி முடிவு – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்க இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் கே.எல் ராகுல் எடுத்துள்ள முடிவு :

அதோடு ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணியானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான முதல் தொடராக நடைபெற இருக்கும் இந்த தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் கடந்த பல ஆண்டுகளாகவே தடுமாறி வரும் இந்திய அணி இம்முறை அந்த நிலைமையை மாற்றி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வருகிறது. அந்தவகையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய ஏ அணி வீரர்கள் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இவ்வேளையில் எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் அதற்கு தயாராகும் வகையில் ஒரு முடிவை கையில் எடுத்துள்ளார். அதாவது தற்போது இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி போட்டியில் விளையாடி வரும் வேளையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டாவது பயிற்சி போட்டியில் தான் விளையாட விரும்புவதாக கே.எல் ராகுல் பி.சி.சி.ஐ-யிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.

- Advertisement -

அதற்கு பி.சி.சி.ஐ-யும் அவருக்கு அனுமதி அளித்து விட்டதால் கே.எல் ராகுல் வரும் திங்களன்று இங்கிலாந்து சென்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டியில் விளையாட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : கிரிஸ் கெயிலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சவாலான விதத்தில் இருக்கும் என்று பலரும் பேசி வரும் வேளையில் அங்குள்ள சூழலை முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்காகவே கே.எல் ராகுல் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து பயணித்து அங்கு நடைபெற இருக்கும் பயிற்சி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement