இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது. குறிப்பாக 3வது ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக ரோஹித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே திண்டாட்டமாக விளையாடி இந்தியாவை தலை குனிய வைத்தனர். இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் இந்தியாவில் சிறிய மைதானங்களில் ஃபிளாட்டான பிட்ச்சில் விளையாடி பழகியதாக இலங்கையுடன் தீக்சனா தெரிவித்துள்ளார்.
வீழ்ந்த இந்தியா:
எனவே சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் அவர்களை தங்களது பலத்தை வைத்து வீழ்த்தியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை இது ஒரு அணியாக எங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். நாங்கள் டி20 தொடரை தொடரை 3 – 0 என்ற கணக்கில் இழந்தோம். அதில் சந்தித்த ஏமாற்றத் தோல்வியை நாங்கள் உத்வேகமாக எடுத்துக் கொண்டோம்”
“1997க்குப்பின் தொடரை வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இந்த அணியில் நானும் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இந்தியா பெரும்பாலும் சிறிய மைதானங்களில் நல்ல பிட்ச்களில் விளையாடுவார்கள். ஆனால் கொழும்பு மைதானத்தில் விளையாடும் போது கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அதை எங்களால் பயன்படுத்த முடியும் என்பது எங்களுக்கு தெரியும்”
“ஏனெனில் எங்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். உள்ளூர் கிரிக்கெட்டிலும் இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். முதல் 2 போட்டிகளை விட மூன்றாவது போட்டியின் பிட்ச் நன்றாக இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். பேட்டிங்கில் ரோகித் சர்மா என்னை அட்டாக் செய்தார்”
இதையும் படிங்க: இந்தியாவின் பலத்தை வெச்சே.. அதை தயாரிச்சு எங்கள் பலத்தால் சாய்ச்சோம்.. இலங்கை கேப்டன் பேட்டி
“அசிதா நல்ல துவக்கத்தை கொடுத்தார். வெல்லலாகே, வண்டர்சே சிறப்பான வேலையை செய்தனர். ஹசரங்கா முதல் போட்டியிலும் அகிலா தனஞ்செயா கடந்த 2 போட்டிகளிலும் குறைந்த எக்கனாமியில் பந்து வீசினார்கள். நான் நிறைய டாட் பந்துகளை வீச விரும்பினேன். இந்த வெற்றி அணியின் முயற்சி. அனைத்து வீரர்களும் பங்காற்றியதாலேயே நாங்கள் 2 – 0 என்ற கணக்கில் தொடரை முடித்துள்ளோம்” என்று கூறினார்.



