இந்தியாவின் பலத்தை வெச்சே.. அதை தயாரிச்சு எங்கள் பலத்தால் சாய்ச்சோம்.. இலங்கை கேப்டன் பேட்டி

Asalanga 5
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது. ஆனால் 3வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆகஸ்ட் ஏழாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 248/7 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நிசாங்கா 45, பெர்னாண்டோ 96, குசால் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 249 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு மீண்டும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 35 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

பலத்தை வெச்சே:
ஆனால் மீண்டும் எதிர்ப்புறம் கில் 6, விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஸ்ரேயாஸ் ஐயர் 8, அக்சர் படேல் 2, ரியான் பராக் 15, துபே 9 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்கவில்லை. அதனால் கடைசியில் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்து போராடியும் இந்தியாவை 138 ரன்களுக்கு சுருட்டிய இலங்கைக்கு அதிகபட்சமாக வெல்லாலகே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இலங்கை 27 வருடத்திற்கு பின் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் இருதரப்பு தொடரை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் 1997க்குப்பின் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தியாவின் பலம் பேட்டிங் என்பதை அறிந்து தங்களுடைய பலமான ஸ்பின் பவுலர்களை வைத்து வீழ்த்தியதாக இலங்கை கேப்டன் அசலங்கா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதற்காக சுழலுக்கு சாதகமான பிட்ச் உருவாக்கி இந்தியாவை தோற்கடித்து டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அசலங்கா பேசியது பின்வருமாறு. “தற்போது நான் மகிழ்ச்சியான கேப்டனாக இருக்கிறேன். இந்தத் தொடர் முழுவதும் எங்களுடைய அணி நன்றாக விளையாடியது. இந்தியா வலுவான பேட்டிங் வரிசையை கொண்டவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்”

இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிராக நாங்க தோத்துட்டோம் தான்.. ஆனா அதை விட இதுதான் முக்கியம் – ரோஹித் சர்மா பேட்டி

“எனவே நாங்கள் எங்களுடைய பலத்தை ஆதரிக்க விரும்பினோம். சுழல் பந்துகள் எங்களுடைய பலம். எனவே நாங்கள் அதற்கு ஆதரவு கொடுப்போம். சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் தான். ஆனால் நீங்கள் தொடரை வெல்ல வேண்டுமெனில் இது போன்றவற்றை செய்தாக வேண்டும். இப்போது நாங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். ஜெயசூர்யா சில மாற்றங்களை செய்தார். எங்களுடைய அணி அவரது தலைமையிலான சூழ்நிலையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறது” என்று கூறினார்.

Advertisement