டூபிளிஸ்சிஸால் காயமடைந்து வெளியேறிய மஹாராஜ். டார்ச்சர் பண்ணாதீங்க ப்ளீஸ் – விவரம் இதோ

Maharaj-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது.

Jadeja

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஜடேஜாவும் தங்களது அசாத்தியமான பேட்டிங் மூலம் இந்திய அணியை சிறப்பான நிலைக்குக் கொண்டு சென்றனர். மேலும் ஜடேஜா சதம் அடிக்கும் வரை காத்திருந்த கோலி இடையில் ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் காயம் அடைந்து தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் போட்டியில் இருந்து வெளியேற கேப்டன் டூபிளிஸ்சிஸ் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஏனெனில் நேற்றைய போட்டியில் மற்ற வீரர்களை விட மகாராஜை அதிகம் பயன்படுத்தினார் டூபிளிஸ்சிஸ். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக மகாராஜ் மொத்தமாக 50 ஓவர்கள் வீசினார் இதுவே அவருடைய காயத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Maharaj

மகாராஜ் 50 ஓவர்கள் வீசி 196 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய மஹாராஜ் டெஸ்ட் போட்டிகளில் தனது நூறாவது விக்கெட்டாக ஜடேஜாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement