ஷார்ட் பால்ல அவரு ரொம்ப வீக். அவரை மட்டும் வேர்ல்டுகப் டீம்ல் சேத்துடாதீங்க – மதன்லால் வெளிப்படை

Madan-Lal
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் அக்டோபர் மாதம் இறுதியில் உலக கோப்பை டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் முனைப்பில் தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தயார்படுத்தி வரும் வேளையில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்கள் தேர்வு செய்து உலக கோப்பை அணியை தயார் செய்து வருகிறது.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியையும் பலமாக கட்டமைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் நேற்று பிசிசிஐ ஒரு மீட்டிங் நடத்தி உள்ளது. அதில் ரோகித் சர்மா, விராத் கோலி, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடங்களை மட்டுமே தற்போது உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் மீதம் உள்ள இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுவதாகவும் இனிவரும் சில தொடர்களில் அடிப்படையிலும் வீரர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை கணக்கில் கொண்டும் உலக கோப்பை அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் t20 உலகக்கோப்பைக்கு சேர்க்க வேண்டிய மற்றும் நீக்க வேண்டிய வீரர்கள் குறித்து பல பரிந்துரைகளை சமூக வலைதளம் மூலமாக அறிவித்து வருகிறார்கள்.

Shreyas-iyer

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன்லால் உலகக்கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயரை சேர்க்க கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை வீரர்களின் பலவீனத்தை அறிந்து மற்ற அணிகளின் வீரர்கள் செயல்படுவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பால் வீக்னஸ் இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவருக்கு எதிராக தொடர்ச்சியாக ஷார்ட் பாலை வீசி அவரை ஆட்டமிழக்க அனைவரும் முயற்சி செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியப் பவுலர்கள் எல்லாம் ஸ்ரேயாஸ் அய்யர் 100 ரன்கள் ஷார்ட் பாலில் அடித்தாலும் கருணையே இல்லாமல் மீண்டும் அவருக்கு எதிராக ஷார்ட் பால் வீசுவார்கள். இப்படி வெளிப்படையாக அவருக்கு இந்த வீக்னஸ் இருப்பது தெரிந்த பின்னரும் அவரை ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் விளையாட வைப்பது தவறான முடிவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : காயத்திலிருந்து குணமடைந்த தமிழக வீரர் – கவுண்டி தொடரில் விளையாட ஒப்பந்தம், ரசிகர்கள் வாழ்த்து

அவர் கூறியதுபோலவே ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஷ்ரேயாஸ் ஐயர் 5 போட்டிகளில் விளையாடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமின்றி ஷார்ட் பாலில் பெரிய அளவில் தடுமாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement