
கடந்த சில வாரங்களாகவே 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள்? என்பதே பலரது மத்தியிலும் அதிகளவு பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் அண்மைக்காலமாகவே இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடி வந்தனர். ஆனால் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது போது சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக அவர் இந்திய டி20 அணிக்குள் மீண்டும் வந்துள்ளதால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக சமீப காலத்தில் நிலையான இடத்தை பிடித்து விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தனது துவக்க வீரருக்கான இடத்தினை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அதோடு பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இருந்தாலும் துவக்க வீரராக இடமில்லை என்றால் கூட மிடில் ஆர்டரில் அவரால் விளையாட முடியும் என்ற ஆதரவுகள் சஞ்சு சாம்சனுக்கு குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பை வின்னருமான மதன் லால் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான தனக்கு விருப்பமான துவக்க வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி விளையாடலாம். ஏனெனில் தற்போது இந்திய அணி அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இந்த அணியில் அபிஷேக் சர்மாவையும், சுப்மன் கில்லையும் விளையாட வைப்பது சரியாகத்தான் இருக்கும்.
டி20 போட்டிகளை பொறுத்தவரை அபிஷேக் ஷர்மா 225 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், சுப்மன் கில் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் விளையாடி வருகின்றனர். இப்படி இரண்டு துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினால் பின்னால் வரும் வீரர்களுக்கும் போட்டியை அதே வேகத்தில் கொண்டு செல்ல உதவும்.
இதையும் படிங்க : சுப்மன் கில் இல்லை.. இந்திய டெஸ்ட் அணியின் உண்மையான மேட்ச் வின்னர் அவர்தான் – முன்னாள் இங்கி வீரர் கருத்து
குறிப்பாக முதல் ஆறு ஓவர்களில் இவர்கள் போட்டியை அதிரடியாக ஆரம்பிக்கும் பட்சத்தில் மிடில் ஓவர்களில் 7, 8, 9 என்கிற ரன் வேகத்தில் 14,16 ஓவர்கள் வரை செல்லலாம். பின்னர் 16 ஓவர்களுக்கு பிறகு கடைசியில் உள்ள மூன்று, நான்கு ஓவர்களில் ஹார்டிக் பாண்டியா, அக்சர் பட்டேல் போன்ற வீரர்களால் பெரிய அளவில் பினிஷிங்கையும் கொடுக்க முடியும் என மதன் லால் கூறியது குறிப்பிடத்தக்கது.