திறமை மட்டும் போதாது.. சச்சின், கோலி மாதிரி சூர்யவன்சி சூப்பர்ஸ்டாராக இதை செய்யனும்.. மதன் லால்

Madan Lal
- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தனது முதல் பந்திலேயே சிக்சரை அடித்த அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அடுத்ததாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் பல படிகள் மேலே சென்ற அவர் 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து ராஜஸ்தான் வெற்றியில் பங்காற்றினார்.

அதிலும் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் 11 சிக்ஸர்கள் அடித்து நிறைய சாதனைகளை படைத்த அவருக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

- Advertisement -

சச்சின் மாதிரி:

இதே போல அவர் தொடர்ச்சியாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக அசத்தும் பட்சத்தில் இந்திய அணிக்காகவும் விளையாடி அவர் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருக்கிறது. இந்நிலையில் திறமை மட்டும் உங்களைப் உயரத்திற்கு எடுத்துச் செல்லாது என்று சூரியவன்சி பற்றி 1983 உலக கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

அந்த திறமையுடன் பணம் மற்றும் புகழ் கிடைக்கும் போது கவனத்தை இழக்காமல் தொடர்ந்து உழைத்து முன்னேறி விளையாடுவதே உச்சத்திற்க்கு கொண்டு செல்லும் என்றும் மதன் லால் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவரைப் பார்க்கும் போது சச்சின் டெண்டுல்கர் தமக்கு நினைவுக்கு வருவதாக பாராட்டிய மதன் லால் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது போன்ற குழந்தையை நான் எப்போதும் பார்த்ததில்லை”

- Advertisement -

ஜாம்பவான் அட்வைஸ்:

“டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது சச்சின் டெண்டுல்கர் தான் இது போன்ற இளம் வயதில் எங்களுக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் 80+ ரன்கள் அடித்தார். பின்னர் வந்த விராட் கோலி இன்னும் விளையாடி வருகிறார். தற்போது அனைவரும் சூரியவன்சியைப் பற்றி பேசுகிறார்கள். அவர் சூப்பர் ஸ்டாராக வருவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: உங்களால் இனிமே எந்த மேஜிக்கையும் செய்ய முடியாது.. அட்லீஸ்ட் இதையாவது செய்யுங்க – சி.எஸ்.கேக்கு ஆர்.பி சிங் அட்வைஸ்

“அவர் மிகவும் திறமை உடையவர். ஆனால் திறமை மட்டும் உறுதியான வெற்றியைக் கொடுக்காது. அவர் தொடர்ந்து கவனத்துடன் கட்டுப்பாட்டுடன் கடினமாக உழைக்க வேண்டும். அவருடைய செயல்முறைகள் சரியாக இருந்தால் பெரிய உச்சத்தை தொட முடியும் என்று நம்புகிறேன். இவை அனைத்தும் நீங்கள் எப்படி உழைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. குடும்பத்தின் ஆதரவும் முக்கியம். உள்ளூரில் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடுவது உங்களுடைய வளர்ச்சிக்கு உதவும்” என்று கூறினார்.

Advertisement