KXIP vs KKR : லைவ் கமெண்ட்ரி செய்து கொண்டே கேட்ச் பிடித்து அசத்திய லின் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Lynn

நேற்றைய போட்டியின் முதலில் ஆடிய பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது 3 ஆவது ஓவரில் வாரியார் வீசிய பந்தில் ராகுல் ஸ்டோக் வைக்க அந்த பந்து கவர் திசையை நோக்கி பறந்தது. அந்த பந்தினை போட்டியின் போது லைவ் கமெண்ட்ரியில் பேசிக்கொண்டிருந்த லின் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதோ அந்த வீடியோ :

ஐ.பி.எல் தொடரின் 52 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. குரான் 24 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார், பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.அதிகபட்சமாக சுபமான் கில் 49 பந்துகளில் 65 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.